வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கொரோனா மூன்றாவது அலை, உலக நாடுகள் பீதி.. அபாய கட்டத்தில் அமெரிக்கா.!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் சமயத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒருவேளை இது மூன்றாவது அலையின் ஆரம்பமோ என அச்சப்பட வைக்கிறது இந்த உருமாறிய கொரோனா வகைகள். வெளிநாடுகளிலும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது

அமெரிக்காவில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,962 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 3,55,72,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து 2,96,25,006 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதித்து மொத்தம் 6,28,468 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது மீண்டும் கொரோனாவின் வேகம் அதிகரிக்க தொடங்கியதால் அங்கே தீவிர கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வருகின்றன.

Corono1-Cinemapettai.jpg
Corono1-Cinemapettai.jpg

உலகம் முழுவதும் பல கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும்,ஒரு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது இந்த உருமாறிய கொரோனாக்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தினாலும் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

அமெரிக்கா, பிரேசில், வாஷிங்டன் போன்ற நாடுகளில் இப்பொழுது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. எனவே இது மூன்றாவது அலையாக இருக்கும் என உலக நாடுகள் எச்சரிக்கை செய்கின்றன. ஆகவே மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்துகின்றனர்.

Trending News