சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் ரவுடி பேபி.. நயன்தாராவை பின்பற்றும் ரகசியம் என்ன தெரியுமா.?

நடிகை சாய் பல்லவி தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். ஆரம்பத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அங்கிருந்து நிராகரிக்கப்பட்டார். அதன் பின்னர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அடிப்படையில் மருத்துவரான சாய்பல்லவி நடனம் மீதுள்ள ஈடுபாட்டால் சினிமா துறைக்கு வந்துள்ளார்.

தமிழ் பெண்ணான சாய்பல்லவிக்கு தமிழ் சினிமா வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் மலையாள சினிமா இவரை சரியாக பயன்படுத்திக் கொண்டது. இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இவரை சாய்பல்லவி என்று சொல்வதைவிட மலர் டீச்சர் என சொல்வது தான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் இளைஞர்கள் மனதில் பதிந்துள்ளது.

பின்னர் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இவர் நடித்திருந்தார், கலி படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து தெலுங்கில் ஃபிடா என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படமும் வெற்றி பெறவே தற்போது தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

sai-pallavi
sai-pallavi

தமிழில் தனுஷுடன் மாரி-2, சூர்யாவுடன் என்ஜிகே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி ட்ரீம் வாரியர் நிறுவன தயாரிப்பில் தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழில் தற்போது நயன்தாரா எப்படி நடிகைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அதேபோல் சாய்பல்லவி கதை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மினிமம் கேரண்டி நடிகை என்ற பெயரைப்  தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெற்று விடலாம் என்பதே அவரின்  எண்ணம் என்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News