90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் விஜே…. இவரை ஞாபகம் இருக்கா? இப்ப என்ன பண்றாருனு தெரியுமா?

இப்பொழுது தான் எண்ண முடியாத அளவிற்கு ஏகப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஒரு காலகட்டத்தில் சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என விரல்விட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே சேனல்கள் ஒளிபரப்பாகி வந்தன. அதிலும் 90களின் பிற்பகுதியில் பெரும்பாலும் எல்லோரின் வீடுகளையும் சன் டிவி தான் ஆக்கிரமித்திருந்தது.

அதில் வரும் சீரியல்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான நீங்கள் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சியும், இதை தொகுத்து வழங்கிய விஜய சாரதியும் மிகவும் பிரபலமாவார்கள்.

ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள சிறப்புகளை பற்றி மூச்சு விடாமல் பேசிக் கொண்டே இருப்பார் சாரதி. பின்னால் நடந்து கொண்டு பேசுவதே அவரது ஸ்டைல். இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் கூட ரசிகர்கள் இருந்தனர்.

vijaya sarathi
vijaya sarathi

பின்னர் பவளக்கொடி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய சாரதி. ஆனால் படங்களில் அவரால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. பின்னர் சித்தி, கோலங்கள், விக்கரமாதித்யன் போன்ற சீரியல்களில் நடித்தார். அதன் பின்னர் ஒருக்கட்டத்தில் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போய்விட்டது.

இந்நிலையில் தான் இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜயசாரதி இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் அங்குள்ள தமிழ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.