இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ஷில்பா ஷெட்டி. சினிமாவில் அதிகம் தோன்றாமல் போகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஏலம் எடுத்திருந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி. 2019ல் தொழிலதிபரும் தயாரிப்பாளருமான ராஜ் குந்தாரா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கணவர் ராஜ்குந்தாரா சினிமா வாய்ப்பிற்காக வரும் பெண்களை ஆடை அவிழ்க்க கூறி பல கோணங்களில் ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக புகார் வந்துள்ளது. புகாரை விசாரிக்க வந்த காவல்துறைக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் குந்தாராவின் செல்போன் மற்றும் கணினியில் நூற்றுக்கணக்கான பெண்களின் புகைப்படம் இருப்பதாய் தெரிந்துள்ளது.
அதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பல்வேறு விதங்களில் ஷில்பாவுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.
அதற்குள் ஷில்பா மீது அவதூறு பரப்பியதாக சில தொலைக்காட்சி நிறுவனங்களின் மீது ஷில்பா நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். போலீஸ் விசாரனைக்கு பிறகு மற்ற தகவல்கள் தெரியவரும் இப்போது வரை லண்டனை சேர்ந்த ஒருவருக்கு இந்த புகைப்படங்கள் வீடியோக்களை விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்தது வரை அம்பலமாகியுள்ளது. இந்த செய்தியறிந்து இந்தி சினிமா உலகமே கடுப்பாகி இருக்கிறது.
மேலும் சினிமா வாய்ப்பை தேடும் ஒரு சில நடிகைகளும் இதில் தொடர்பு இருப்பதாகவும் ஒருவேளை இவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெளியாகி விடுமோ என பயந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.