வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்.. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் தலைவர்கள்!

எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்தவர் மதுசூதனன். அதன்பிறகு எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். அதன்பிறகு கட்சிக்காக பாடுபட்டுள்ளார். அதன் பிறகு அதிமுக கட்சியின் அவைத் தலைவராக பொறுப்பேற்றார் மதுசூதனன்.

எம்ஜிஆர் தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சி வந்த செய்த காலத்திலும் மதுசூதனன் அவைத்தலைவராக இருந்துள்ளார். நீண்ட நாட்களாக அதிமுக கட்சியில் அவைத் தலைவராக பொறுப்பேற்று இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலை குறித்து பார்வையிடுவதற்காக அதிமுக சார்ந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உட்பட பலரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.

madhusudhanan
madhusudhanan

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மதுசூதனன் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். தற்போது இவருக்கு வயது 80 அதிமுகவில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் அவைத் தலைவராக பணியாற்றியுள்ளார். தற்போது இவருடைய இறப்பு அதிமுகவிற்கு பெரிய இழப்பு என பல தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அதிமுக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் கட்சிக்காக பாடுபட்ட உண்மையான தொண்டனை இறந்ததாக அக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Trending News