புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமல் மகளின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டது யார்? நான் இல்லை என அக்ஷராவுடன் மல்லுக்கட்டும் காதலன்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் இரண்டாவது மகளான அக்சராஹாசன் பிரபல ஹிந்தி நடிகர் தனுஜ் விர்வானி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக தங்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தனர்.

வழக்கம்போல் ஒரு கட்டத்தில் காதல் சலிப்படைய இருவரும் மனமொத்து பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அவர்கள் இருவருமே சினிமாவில் அவர்களுடைய வழியைப் பார்த்து சென்றுவிட்டனர்.

இந்த நேரத்தில்தான் யாரோ அக்ஷராவின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அக்ஷரா உள்ளாடையுடன் இருந்த இந்த புகைப்படங்கள் காட்டு தீ போல் பரவி அவரது பெயருக்கு களங்கம் விளைவித்தது.

இதை தன்னுடைய முன்னாள் காதலர் தனுஜ் விர்வானி என்பவர் தான் வெளியிட்டிருப்பார் என நினைத்து அவருடன் சண்டை போட்டுள்ளார். தனுஜ் தான் அப்படி செய்யவில்லை என தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.

ரசிகர்கள் அனைவருமே தனுஜ் விர்வானியை தவறாக பேச அக்ஷரா, அவர் அப்படி செய்திருக்க மாட்டார் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தனுஜ் விர்வானி மனம் நொந்து பேசியுள்ளார்.

அதில் இந்த பிரச்சனை வெளிவந்த சில நாட்களுக்கு பிறகு அக்ஷராவுக்கு போன் செய்து, நான் இப்படி செய்திருப்பேன் என்று நினைக்கிறாயா? என்று கேட்டேன். அதற்கு அக்ஷரா. தன்னுடைய தந்தை கமல் அரசியலுக்கு வர உள்ளதால் இது பற்றி இப்போதைக்கு பேச வேண்டாம் என மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது வரை அந்த புகைப்படங்களை யார் வெளியிட்டார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.

akshara-hasan-cinemapettai
akshara-hasan-cinemapettai

Trending News