செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பாபாவுக்கு செய்த துரோகம், கே.டி. ராகவனை இந்த கெதிக்கு ஆளாகியுள்ளது.. பரபரப்பைக் கிளப்பிய நடிகர்

தமிழ் சினிமாவில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர்தான் நடிகர் சண்முகராஜன். இவர் பல்வேறு படங்களில் பெரும்பாலும் துணைக் கதாபாத்திரங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகர் சண்முகராஜன் சிவசங்கர் பாபாவின் சீடர் என்பதால் அவருக்கு சப்போர்ட்டாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இவருடைய இந்த மனம் திறந்த பேச்சால், திரையுலகமே சண்முகராஜனை திரும்பிப்பார்த்து உள்ளது. ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கே.டி. ராகவன் தொடர்பான தனிப்பட்ட வீடியோ ஒன்று நேற்று சோஷியல் மீடியாக்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அவர் ராஜினாமா செய்யப்பட்டார்.  இந்த கே.டி. ராகவனுக்கும், சிவசங்கர் பாபாவுக்கும் என்ன தொடர்பு என்றால்,

கே.டி. ராகவனுடைய மனைவி சிவசங்கர் பாபாவின் ஆசிரமத்தில் நடனம் கற்று கொள்ள வந்ததன் மூலம், சிவசங்கர் பாபாவிற்கும் கே.டி. ராகவனுக்கும் தொடர்பு ஏற்பட்டதாம். தற்போது சிவசங்கர் பாபாவின் சீடரும் நடிகருமான சண்முகராஜன் வெளியிட்டுள்ள பேட்டியில், ‘நான் ஆரம்பகாலத்தில் பெரியார் கம்யூனிசம் மீது அதிக தாக்கம் ஏற்பட்டு, அதன் பின்பு திடீரென்று சித்தர் வழிபாட்டில் ஆர்வம் வரவே, சிவசங்கர் பாபாவை குருவாகவும் மகானாகவும் ஏற்றுக்கொண்டேன்.

அதன் பின் பத்திரிக்கைகளில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டதை அறிந்ததும், ஆசிரம நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்த ஜானகி சீனிவாசனை சென்று சந்தித்தபோது, ‘இதற்கெல்லாம் பயப்பட வேண்டாம், ஒன்றும் நடக்காது’ என்று கூறினார். அதன்பின் கேடி ராகவன் இந்த விசயத்தை அமித்ஷா வரை கொண்டு சென்றுள்ளார்.

என்னைப்பொறுத்தவரை சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டதற்கு, ஜானகி மற்றும் அவருடைய கூட்டாளிகளின் சதி வேலையாகத்தான் இருக்கும். சங்கர் பாபா கைது செய்யப்பட்ட பின் மருத்துவ சிகிச்சைக்காக, நான் அவரை சென்று பார்க்கும்போது, எனக்கு ஆசிரமும் ஜெயிலும் ஒன்றுதான், நான் நிம்மதியாக தான் இருக்கிறேன். என்னுடைய சீடர்களான நீங்களும் பொறுமையாக இருங்கள்’ என்று கூறினார்.

எனவே சங்கர் பாபாவின் ஆசிரமத்திற்கு எக்கச்சக்கமான சொத்துக்கள் இருப்பதால், அதனை அபகரிக்கும் நோக்கத்திலேயே ஜானகி மற்றும் கே.டி. ராகவன் குரூப் இப்படி ஒரு திட்டத்தை போட்டுள்ளது. தற்போது ராகவனின் பற்றி வெளியாகியுள்ள வீடியோவின் மூலம், பாபாவிற்கு செய்த துரோகம் தான் அவரை இந்த கெதிக்கு ஆகி உள்ளது.

shanmugarajan-cinemapettai
shanmugarajan-cinemapettai

நான் சொல்வது என்னவென்றால், சங்கர் பாபா நடத்துகின்ற பள்ளிக்கூடத்தில் தவறு நடந்திருந்தால், அதனை அரசு முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கட்டும். அதேசமயம் பழைய மாணவிகள் என்ற பாபாவின் மீது புகார் சொல்லும் நபர்களின் பின்னணியில் ஜானகி அவர்களுடைய கூட்டாளிகளுக்கு தொடர்பு இருக்கும் என்கின்ற சந்தேகம் எனக்கிருக்கிறது’ என்றார் சண்முகராஜன். இவருடைய இந்தப் பேட்டியின் மூலம் சங்கர் பாபா நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வி எனத் தொடங்கி உள்ளது. மேலும் இது குறித்து போலீசார் மட்டுமே தகுந்த விசாரணையின் மூலம் தீர்வு காண முடியும்.

Trending News