விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில், வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடிக்கும் நடிகைதான் பரீனா. இவர் சின்னத்திரையில் தொடக்கத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, அதன் பின் முன்னணி சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் திருமணமாகி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால்,
அவ்வபோது போட்டோ ஷூட்களை நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். எனவே நீண்ட நாட்களாக இதற்காக காத்துக்கொண்டிருந்த பரீனாவிற்கு சோசியல் மீடியாக்களில் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த அகிலன்,
விஷால் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தற்போது சுகேஷ் சந்திர சேகரன் என்ற புதுமுக நடிகர் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த வரிசையில் வெண்பாவும் பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து விலகி விடுவாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழத் தொடங்கியுள்ளது.
ஏனென்றால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வெண்பா, இனி வரும் நாட்களில் வயிறு தெரிய வாய்ப்புள்ளது. அதனால் இந்த சீரியலில் இருந்து விலகி விடுகிறேன் என்று இயக்குனரிடம் வெண்பா கேட்டுள்ளார்.
அதற்கு இயக்குனர், ‘வெண்பா கதாபாத்திரத்திற்கு நீங்கள்தான் கச்சிதமாக பொருந்தி உள்ளீர், தொடர்ந்து நீங்களே நடியுங்கள். மற்றவற்றை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டாராம்.
ஆகையால் வெண்பா இப்போதைக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக மாட்டார் என்பதை ஆணித்தரமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இதைக்கேட்ட ரசிகர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.