சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர்.. கல்லூரி நண்பரை நேரில் சென்று பார்த்த முதல்வர்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த முன்னணி இயக்குனர் தான் டி.பி. கஜேந்திரன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் கலக்கியுள்ளார். குறிப்பாக பிரசாந்த் நடித்த சீனாதானா படத்தில் இவர் அடித்த லூட்டி ரசிகர்களால் அதிகம் புகழப்பட்டது.

இயக்குனர் விசுவின் உதவியாளராக சினிமா பயணத்தை தொடங்கிய டி.பி. கஜேந்திரன் அவரைப்போலவே குடும்ப கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் அதிக கவனம் செலுத்தினார்.

இத்தகைய டி.பி .கஜேந்திரன் கடந்த சில வருடங்களாக சுவாசக் பிரச்சினையினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனால் படங்களிலும் சில காலங்களாக நடிப்பதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையை சிகிச்சை பெற்ற டி.பி. கஜேந்திரன் தற்போது குணம் அடைந்துள்ளார்.

எனவே டி.பி. கஜேந்திரன் அவர்களை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். டி.பி. கஜேந்திரனும் மு.க. ஸ்டாலின் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த தோழர்கள் என்ற விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.

T. P. Gajendran
T. P. Gajendran

ஆகையால் நட்பு ரீதியாக மு.க. ஸ்டாலின், டி.பி. கஜேந்திரனை நலம் விசாரிக்கச் சென்றுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் நண்பர்கள் என்ற விஷயம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.

அதைப்போல் யாரும் அறிந்திராத இந்த செய்தி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் சந்திக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதிக கவனம் பெற்று வருகிறது

Trending News