வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தலைவி வசூலை பார்த்து தெறித்து ஓடிய ராஜமௌலி.. ரிலீஸ் தேதியை தள்ளி போட்ட காரணம் தெரியுமா.?

உலகளவில் மிகவும் பிரபலமான பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ஆர்.ஆர்.ஆர். 1920ஆம் ஆண்டு வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இப்படம் 2022ஆம் ஆண்டு உகாதி அன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் தேதி அறிவிக்காமல் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். இதுகுறித்து படக்குழுவினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, “பலருக்கு இது தெரிந்திருக்கும் . எங்கள் ஆர்.ஆர்.ஆர் படத்தை நாங்கள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளோம். பல்வேறு இடங்களில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என தெரியாது. இதன் காரணமாக எங்களால் தேதியை உறுதிப்படுத்த முடியாது” என குறிப்பிட்டுள்ளனர்.

படக்குழுவினர்களின் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மிகவும் பிரமாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகம் முழுவதும் ஆர்.ஆர்.ஆர் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால், அனைத்து இடங்களிலும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரே படத்தை வெளியிட உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் மற்றொருபுறம் தலைவி படத்தின் தோல்வியால் தான் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீடு தள்ளி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதேபோல் நாடு முழுவதும் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட படம் தான் தலைவி. மறைந்த முதல்வரின் பயோபிக் படம் என்பதால் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தலைவி படம் வெற்றிபெறவில்லை. இப்படத்தின் முதல் நாள் வசூலே வெறும் 40 முதல் 50 லட்சம் தானாம்.

rrr-release-postponed-twit
rrr-release-postponed-twit

பிரமாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம் இது போன்று தோல்வியை தழுவியதால் அவசரப்பட்டு ஆர்.ஆர்.ஆர் படத்தை வெளியிட வேண்டாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல் படத்தை முழுவதுமாக தயார் செய்த பின்னர் வெளியிடலாம் என்றும், அதற்குள் முழுவதுமாக திரையரங்குகள் திறக்கப்பட்டு விடும் என்பதற்காகவும் இப்படத்தின் வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.

Trending News