வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய விக்ரம் மருமகன்.. எது இருந்தாலும் செய்யறதுக்கு மனசு வேணும்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கூட தன் மகனுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்னும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முதலில் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி வைத்தார். தற்போது இவரது குடும்பத்தில் மற்றொருவர் சினிமாவில் நடிக்க உள்ள தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விக்ரமின் மகள் அக்ஷிதாவை மனோ ரஞ்சித் காதல் திருமணம் செய்துகொண்டார்.

manu ranjith
manu ranjith

திமுக கருணாநிதி பேரனும் சி கே ரங்கநாதன் மகனுமான மனோ ரஞ்சித் தற்போது சினிமாவில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 4 வருடங்களாக படத்தில் நடிப்பதற்காக முடி வளர்த்துள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சமீபத்தில் வளர்த்த முடியை தானமாக கொடுத்துள்ளார். அதற்கு காரணம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்காக தேவைப்பட்டதால் தனது முடியை தானமாக கொடுத்துள்ளார். தற்போது இவருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நடிப்பைத் தாண்டி இவர் செய்த செயல் பாராட்டுக்குரியது எனவும் கூறி வருகின்றனர்.

Trending News