புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குடியும் குடுத்தனுமாக சென்ற ஸ்ரேயா.. புகைப்படத்துடன் உறுதி செய்த கணவர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அறுபது படங்கள் வரை நடித்த ஸ்ரேயா. பிறந்தது உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் தான். தெலுங்கு படம் ஒன்றில் 2001-ல் நடிக்க துவங்கிய அம்மணி தமிழ் பக்கம் வந்தது எனக்கு 20 உனக்கு 18 என்கிற படத்தின் வாயிலாய் தான்.

தொடர்ந்து ரஜினி, விஜய், தனுஷ், விஷாலுடன் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றார் ஸ்ரேயா சரண். கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று தன் நடன அசைவுகளால் காய் நகர்த்தி வந்தார்.

ஐட்டம் சாங் தேவைப்படாத அளவிற்கு கவர்ச்சியை அள்ளித்தரும் கவர்ச்சிக்கடல் சில வருடங்களாக படவாய்ப்பு இல்லாமல் போனது. அவ்வப்போது பாலிவுட் பக்கம் தலைகாட்டி வந்த ஸ்ரேயா 2018-ல் விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து ஸ்பெயினில் வசித்து வந்தார்.

shriya saran
shriya saran

திரையில் கொண்டாடப்பட்ட நடிகை திடீரென மாற்று நாட்டுக்கு செல்லவே எதிர்பாராத ரசிகர்களுக்கு சற்றே வருத்தம் தான்.

இந்தியாவில் வீடு வாங்கி குடியேற வேண்டும் என்கிற கனவோடு இருந்த ஸ்ரேயா இப்போது மும்பையின் பாந்திரா நகரில் வீடு வாங்கி குடியேறியுள்ளார். திருமணம் முடிந்து இத்தனை நாளில்  இப்பொழுதுதான் சொந்த வீட்டிற்கு குடியும் குடுத்தனுமாக மொத்தமாக செல்கிறாராம் ஸ்ரேயா. அதனையும் அவரது கனவரே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Trending News