ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விராட் கோலிக்கு அழுத்தம் கொடுத்ததா பிசிசிஐ? தாதா கங்குலியின் ராஜ தந்திரமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் ஹாட் டாபிக் விராத் கோலியின் ராஜினாமா கடிதம். நடக்கவிருக்கும் 2021- 20 ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்த பின்பு, விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக கடிதம் ஒன்றை பிசிசிஐக்கு அனுப்பியுள்ளார்.

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்யப் போகிறார் என்ற செய்தியை அறிவித்தவுடன், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஒத்துக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. கங்குலியின் இந்த செயல் பிசிசிஐ தரப்பில் இருந்து கேப்டன் விராட் கோலியை பதவி விலகுமாறு வற்புறுத்தியது அப்பட்டமாக தெரிகிறது.

Ravi-Cinemapettai-1.jpg
Ravi-Cinemapettai-1.jpg

பல மாதங்களாக பிசிசிஐ தரப்பில், பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்ததை கண்டுகொள்ளாமல் விட்ட கோலி, சவுரவ் கங்குலியின் அடுத்தடுத்த செயல்களால் பதவி விலகுவதற்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் காரணமாக தோனியை, இந்திய அணியின் ஆலோசகராக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்தபடியாக அனில் கும்ப்ளேவை மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக கொண்டுவர திட்டமிட்டது என்பது போன்ற செயல்களால் தான் விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் என பேச்சுக்கள் நிலவுகிறது.

அதுமட்டுமின்றி மற்றொரு முக்கிய காரணமாக, ரவி சாஸ்திரியின் பதவி காலம் வேறு முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே பரிந்துரை செய்யப்படுவதாகவும் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

Kumble-Cinemapettai.jpg
Kumble-Cinemapettai.jpg

அனில் கும்ப்ளே மீண்டும் பயிற்சியாளராக வந்தால் அவருடன் இணைந்து விராட் கோலி செயல் படுவாரா என்பது கேள்விக்குறி. இதுபோன்ற காரணங்களாலும், தமக்கு நெருக்கடி ஏற்படும் என்ற பயத்தினாலும், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக தெரிகிறது.

Trending News