சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தியேட்டர் வேண்டாம், ஓடிடிக்கு படையெடுக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்.. தட்டி தூக்கிய ஹாட்ஸ்டார்.!

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் பல மாதங்களாக பூட்டி இருந்தன. இதையடுத்து தற்போது நோய் தொற்று பரவல் குறைந்துள்ளதால், 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்களும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன.

இருப்பினும் பல நடிகர்கள் தங்கள் படங்களை ஓடிடியில் வெளியிடவே விரும்புகின்றனர். திரையரங்கைவிட ஓடிடியில் அதிக லாபம் கிடைப்பதால் தயாரிப்பாளர்களும் இதையே விரும்புகிறார்கள். அந்த வரிசையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவரது படங்களான துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி ஆகிய இரண்டும் படங்களை அடுத்தடுத்து ஓடிடியில் வெளியிட்டார்.

தற்போது விஜய் சேதுபதியை போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இரண்டு நடிகர்கள் அவர்களது படங்களை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓமணப்பெண்ணே மற்றும் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் ஆகிய இரண்டு தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் கவின் ஆகிய இருவருமே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு முன்னரே திரையில் தோன்றி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவர்கள் இருவருக்கும் பெயர் பெற்று தந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இதில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓமணப்பெண்ணே படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதேபோல் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தை இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கி உள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா நடித்துள்ளார்.

lift-omanapenne
lift-omanapenne

இந்த இரண்டு படங்களும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விரைவில் இவ்விரு படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News