வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

செம்பருத்தி சீரியலால் நொந்து நூடுல்ஸ் ஆகும் ரசிகர்கள்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு

2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் செம்பருத்தி. காதல் மற்றும் குடும்ப பின்னணியை கதைக்களமாகக் கொண்ட இந்த சீரியலில் ஆதிகடவூர் அகிலாண்டேஸ்வரி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியாராமன் நடித்து வருகிறார். இவருடன் கார்த்திக்ராஜ், ஷபானா லக்ஷ்மி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் நாயகி பார்வதி தன் தந்தை டிரைவராக வேலை செய்யும் அகிலாண்டேஸ்வரியின் வீட்டில் சமையல் வேலைக்கு செல்கிறார். முதலில் அனைவராலும் வெறுக்கப்படும் நாயகி பின்னர் தன்னுடைய நல்ல குணத்தால் அனைவரின் நன்மதிப்பையும் பெறுகிறார். இவ்வாறு ஆரம்பிக்கும் இக்கதை, நாயகன் நாயகி இடையே உள்ள காதல், நாயகிக்கு அந்த வீட்டின் மீது உள்ள விசுவாசம், ஆதிகடவூர் பரம்பரையை அழிக்கத் துடிக்கும் வில்லி நந்தினி அவருடன் கைகோர்க்கும் வனஜா போன்ற காட்சிகளுடன் பிரம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் ஆதித்யா எனும் கதாபாத்திரத்தில் கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற தொடர்களில் நடித்த கார்த்திக் ராஜ் நடித்து வந்தார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதன் காரணமாகவே இந்த சீரியல் டிஆர்பில்  தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. ஆதித்யா மற்றும் பார்வதியின் காதல் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது இதுவே இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.ஆரம்ப காலகட்டத்தில் விறுவிறுப்பாக நடந்த கதை களத்தில் போகப்போக தொய்வு ஏற்பட்டது.

ஆதித்யா பார்வதியின் திருமணத்திற்கு பிறகு கதையில் ரசிகர்கள் அவ்வளவாக ஈர்க்கப்பட வில்லை ஆனால் மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அகிலாண்டேஸ்வரி திரும்பத் திரும்ப கூறுவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் ஆதித்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் மாற்றப்பட்டு அவருக்கு பதில் வி.ஜே அக்னி நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஜனனியும் வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் காட்சிகளில் அகிலாண்டேஸ்வரி சிறையில் இருப்பதால் இரண்டாவது மருமகளான ஐஸ்வர்யாவிடம் முழு பொறுப்புகளையும் ஒப்படைக்கிறார் இதனால் உருவாகும் பிரச்சனைகளை பார்வதி எப்படித் தீர்க்கிறார் என்று காட்டப்படுகிறது.

இதில் பார்வதியின் கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பது போல் காட்சிகள் வருவதால் ரசிகர்களுக்கு சீரியலின் மீதான ஆர்வமும் குறைந்து வருகிறது விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சீரியல் மீண்டும் பார்வதியின் பிறப்பு பற்றிய ரகசியத்தை நோக்கி கதை நகர்ந்து வருகிறது. கதையில் ஏற்பட்ட தொய்வு பற்றாக்குறையின் காரணமாகவே ரசிகர்கள் சீரியல் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர்.

Trending News