புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தன் கன்னத்தை கடிக்க ஆசைப்படும் ஒல்லி நடிகர்.. 67 வயதில் இதென்ன விபரீத ஆசை சார்

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பூர்ணா. அதன்பிறகு துரோகி, ஆடுபுலி மற்றும் தகராறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தலைவி.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பூர்ணாவின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.

பூர்ணா படங்கள் நடிப்பது தாண்டி பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். தெலுங்கில் பிரபல சேனல் ஒன்றில் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பூர்ணா ஒரு சிறுவனின் நடனத்தை பார்த்துவிட்டு. அந்த சிறுவனை அழைத்து பாசத்தின் முறையில் கன்னத்தைக் கடித்துள்ளார். சமீபத்தில் இப்புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

manobala-cinemapettai
manobala-cinemapettai

இதனைப் பற்றி பேசிய மனோபாலா அந்த சிறுவனின் நடனத்தை பார்த்து மகிழ்ச்சி தாங்க முடியாமல் பூர்ணா கன்னத்தைக் கடித்ததாகவும் இதைப் பற்றி பூர்ணாவிடம் கேட்டபோது சிறு வயதிலிருந்தே எனக்கு ரொம்ப பிடித்தவர்களை கன்னத்தில் முத்தம் கொடுத்து கடிப்பது பழக்கம் என தெரிவித்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரது அம்மா, தங்கச்சி மற்றும் தம்பி உட்பட அனைவரையும் செல்லமாக கடிப்பார் எனவும் தெரிவித்தார்.

மேலும் இது பாசத்தின் எல்லையா இல்ல பாராட்டின் எல்லையா என்பது புரியவில்லை ஆனால் அந்த சிறுவன் இரவு முழுதும் தூங்காமல் இருந்திருப்பான் எனவும் தெரிவித்தார். மனோபாலா நான் எப்படியாவது பூர்ணாவிடம் கெஞ்சி கூத்தாடி ஆவது என் கன்னத்தை கடிக்க வைத்து விடுவேன் என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் 67 வயதில் இந்த ஆசையெல்லாம் தேவையா என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

Trending News