விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்பொழுது லக்ஷ்மி அம்மாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த திருப்பத்தை நோக்கி நகர்கிறது. லட்சுமி அம்மாவின் மறைவிலிருந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.
தற்போதைய எபிசோடில் முல்லையின் அக்காவான மல்லி தனது வளர்ப்பு மகனான பிரசாந்த் அத்தையின் இறப்பு செய்தியை கேட்டு ரொம்ப வருத்தப்பட்டான் என்று கஸ்தூரியிடம் கூறுகிறார். ஐஸ்வர்யாவுடன் திருமணம் நடந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது அங்கு வரும் தனத்தின் அம்மா அவர்களிடம் தற்பொழுது தனம் தான் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்கிறாள் என்று பெருமையாக கூறி விட்டு செல்கிறார். அதைக்கண்ட மல்லி பொறாமையில் பொங்குகிறார்.
அதை ஏற்றி விடுவது போல் கஸ்தூரி, லக்ஷ்மி அம்மா இல்லாததால் இனி அங்கு தனத்தின் ராஜ்ஜியம்தான் என்று கூறுகிறார். அதற்கு மல்லி என்னை தனம் கோவிலில் பார்த்த பொழுது வீட்டிற்கு கூப்பிடாமல் இருந்து இருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்து இருக்காது என்று கோபமாக கூறுகிறார்.
மேலும் நான் வாழ வேண்டிய இடத்தில் இப்பொழுது அவள் வாழ்ந்து கொண்டு நன்றாக இருக்கிறாள் நான் மட்டும் இப்படி இருக்கிறேன் என்று வன்மமாக கூறுகிறார். இந்த காட்சி தனத்திற்கு புதிய எதிரியாக மல்லி உருவெடுப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
தன் தாயின் இழப்பால் வாடும் கண்ணனை, மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லத்தரசிகளிடம் இருந்து வருகிறது.