சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காலேஜ் ஸ்டூடண்ட் மண்டையில் விழுந்த அரசு பேருந்து கண்ணாடி.. இலவச டிக்கெட் இதுக்குதானா

தமிழ்நாடு அரசு தற்போது மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட டவுன் பஸ்ஸில் பெண்கள் அனைவருக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என கூறினர். அதன் அடிப்படையில் தற்போது பலரும் அரசு பேருந்தினை நம்பி பயணம் செய்து வருகின்றனர்.

அப்படி அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் இறங்கும் இடம் வந்தத உடன் பேருந்தின் நுழைவாயிலில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது நுழைவாயிலின் மேல் இருந்த கண்ணாடி அந்த மாணவரின் தலையில் விழுந்தது. இதனால் பலத்த காயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை பார்த்த சக பயணிகள் இலவசம் என்ற பெயரில் தரமில்லாத பேருந்துகளை அனுப்பி வைக்கிறார்கள். இதனால் பள்ளிகள் உட்பட பலரும் பாதிப்பு உள்ளதாக கூறி வருகின்றனர். இதனை உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து அரசு பேருந்துகளும் தரமுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகு பேருந்தினை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி வருகின்றனர்.

Trending News