விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சீரியல் பாரதி கண்ணம்மா. ஒவ்வொரு வாரமும் ஒரு எதிர்பார்ப்புடன் நகர்ந்து வருகிறது. தற்போது இயக்குனர் இந்த வார காட்சிகளால் இல்லத்தரசிகளின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
பாரதிகண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரினா தற்போது நிறைமாத கர்ப்பமாக இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. சில நாட்களுக்கு முன் தொடரின் வில்லியான வெண்பா கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தையைப் பற்றி கொடூரமான வார்த்தைகள் பேசுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டது.
இந்த காட்சிக்கு ரசிகர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். தாயாகப் போகும் அவருக்கு இந்த மாதிரி வசனங்களை கொடுப்பது சரியல்ல என்று இயக்குனரை திட்டி தீர்த்தார்கள்.
தற்போது இந்த வார கட்சியில் பாரதியின் அம்மாவான சௌந்தர்யா, வெண்பாவை சுடுவதற்காக துப்பாக்கியுடன் ஆவேசமாக வருகிறார். அவரைக் கண்ட வெண்பா அதிர்ந்து நிற்கிறார் மேலும் சௌந்தர்யா வெண்பாவை சோபாவில் தள்ளி துப்பாக்கியால் அவரது நெற்றியில் சுட்டு விடுகிறார்.
இந்த காட்சியை கண்ட இல்லத்தரசிகள் அதிர்ந்து போயினர். நிறைமாத கர்ப்பமாக இருக்கும் பரினா இது போன்ற காட்சியில் நடித்து இருக்கக்கூடாது என்றும், இவ்வளவு மோசமான காட்சியை படமாக்கிய இயக்குனரை இல்லத்தரசிகள் திட்டித் தீர்க்கின்றனர்.