விஜய்க்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியல் ஆசை இருந்தாலும் சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அடிக்கடி அரசியல் பற்றி பேசியதால் அவருடனான பேச்சுவார்த்தையை பல நாட்களாக விஜய் நிறுத்தி விட்டார் என எஸ்ஏ சந்திரசேகர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
கடைசியாக நடந்த ஒரு விழா மேடையில் கூட விஜய் தன்னை வீட்டின் வாசலிலேயே நிற்க வைத்து விட்டு அவருடைய அம்மாவையும் மட்டும் வீட்டிற்குள் அழைத்து அன்பை பரிமாறிக் கொண்டார் என வேதனையுடன் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். விஜய்க்கு அப்பா மீது அரசியல் கோபம் மட்டும் தான் என்கிறது அவர்களது வட்டாரம்.
இந்நிலையில்தான் விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கிட்டத்தட்ட 100 இடங்களில் வெற்றி பெற்று விஜய்யின் அரசியல் கனவை பெரிதாக்கி விட்டனர். அரசியலில் பிரபலமான கட்சிகள் கூட பல இடங்களை கைப்பற்றுவதில் தடுமாறிய நிலையில் விஜய் மக்கள் இயக்கம் அசால்டாக இதைச் செய்தது.
இதனால் விஜய்க்கு மீண்டும் அரசியலில் ஒரு இடத்தை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டதாம். இதனால் சண்டையை மறந்து தன்னுடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் க்கு போன் செய்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் வட்டாரம் மீண்டும் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர் விடுகிறதா? என கேள்வி எழுப்புகின்றனர். சத்தமில்லாமல் விஜய் அரசியலில் சாதித்து வருகிறார் என ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள் இப்போதே ஆரம்பித்து விட்டார்களாம்.