ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பயிற்சியாளர் கிடைத்து விட்டார், தலைவலியில் இருந்து தப்பித்த பிசிசிஐ.. முடிவுக்கு வந்தது பஞ்சாயத்து

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது நிலவி வரும் பெரிய பிரச்சனை, இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பதுதான். இந்த விஷயத்தில் நீண்ட நாட்களாக பிசிசிஐ பெரிய குழப்பத்தில் இருந்து வந்தது.

20 ஓவர் உலக கோப்பை பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Ravi-Cinemapettai-1.jpg
Ravi-Cinemapettai-1.jpg

ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் ராகுல் டிராவிட்டை சந்தித்துள்ளனர்.அந்த சந்திப்புக்குப் பின் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவதற்கு டிராவிட் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது உறுதியாகி விட்டது எனவே அவர் விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று தெரிவித்துள்ளார்

Rahuldravid-Cinemapettai.jpg
Rahuldravid-Cinemapettai.jpg

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதை அறிந்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ராவிட் ஏற்கனவே இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக திறம்பட செயல்பட்டு நிறைய வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கித்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News