சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமடைந்த சீரியல்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் டாக்டர் படித்த கதாநாயகனுக்கும் படிக்காத கதாநாயகிக்கும் இடையே காதல் திருமணம் நடந்து அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கும்.
ஒரு கட்டத்தில் அந்த குழந்தைக்கு அப்பா பாரதி இல்லை என்று, அவன் வாயாலே பழித்துப் பேசியதும் வீட்டை விட்டு வெளியேறிய கதாநாயகி கண்ணம்மா தனி ஒரு ஆளாக தன்னுடைய மகளை வளர்த்து ஆளாக்குவார். மற்றொரு குழந்தையை அப்பாவிடம் அனாதை குழந்தையாக பாரதியிடம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய கதைக்களத்தை கொண்ட பாரதி கண்ணம்மா சீரியல் இவ்வளவு ட்ரெண்டானதற்கு முக்கியமான காரணம் கண்ணம்மாவின் நடிப்புதான். கண்ணம்மாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவருடைய நிறத்திற்கும் தோற்றத்திற்கும் கண்ணம்மா கதாபாத்திரம் சுத்தமாக பொருந்தியிருக்கும் அதைவிட அவருடைய நடிப்பு பின்னிப் பெடலெடுக்கும். எனவே பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய அங்கமாக இருக்கும் ரோஷினி திடீரென்று பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதை அறிந்த பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள், ‘உங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை பார்க்கிறேன்’ என்று ஆதங்கப்படுகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலை தளங்களில் இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இருப்பினும் இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரோஷினி தவிர வேறு யாரும் கண்ணம்மா கதாபாத்திரத்தை கச்சிதமாக நடிக்க வாய்ப்பில்லை என்பதே ரசிகர்களின் குமுறல்.