டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருக்கும் விஜய் டிவி சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியலுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு மக்களை கவர்ந்த சீரியல். இயக்குனர் பிரவீன் பென்னட் அவர்களின் இயக்கத்தில் அற்புதமாக உருவாகி கலக்கி வரும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா.
இதில் கதாநாயகனாக அருண் பிரசாத்தும், கதாநாயகியாக ரோஷினி ஹரிப்ரியனும் நடித்து வருகின்றனர். திடீரென சில நாட்களாக இணையத்தில் இந்த சீரியல் குறித்து வரும் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தச் செய்தியில் பாரதிகண்ணம்மா சீரியலின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரோஷினி விலகுவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இதன் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் ரசிகர்கள் பலரும் தங்கள் இணையதள பக்கத்தில் ஹீரோயினை மாற்றம் செய்ய வேண்டாம் என கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து இந்தத் தொடரின் இயக்குனர் பிரவீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் மறுப்பு தெரிவிப்பது போல் ஒரு ஸ்மைலி எமோஜி ஒன்றை போட்டு கண்ணம்மா என பதிவிட்டிருக்கிறார்.
இதிலிருந்து ஹீரோயின் மாற்றம் மட்டுமல்லாமல், கண்ணம்மா கதாபாத்திரமே இல்லாதது போல் தெரிகிறது. இவ்வாறு இந்தப்பதிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.