ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விராட்கோலிக்காக 10 ஆண்டு சிறை சென்ற பாகிஸ்தான் ரசிகர்.. இந்தியா மீது அவ்வளவு வெறி

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி 2008ஆம் ஆண்டு முதல் அணியில் விளையாடி வருகிறார். ஆரம்பத்திலிருந்தே கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய ஆளுமையை நிரூபித்து வரும் கோலி இந்தியாவின் ரன் மெஷின் என்று அழைக்கப்படுவார்.

தற்போது தோனியின் ஓய்வுக்குப் பின் இந்திய அணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். எப்பொழுதும் இந்திய அணி எதிரணியின் டார்கெட்டை விரட்டி பிடிப்பதில், விராட் கோலியின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.

அதனால் இவரை கிங் கோலி எனவும் செல்லமாக அழைப்பார்கள். இவருக்கு இந்திய நாட்டில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஒரு முறை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 20 ஓவர் போட்டியில் விராத் கோலி 90 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

அதை கொண்டாடும் விதத்தில் பாகிஸ்தான் ரசிகர், உமர் ட்ராஸ் என்னும் தையல் தொழிலாளி தன்னுடைய வீட்டின் கூரையின் மேல் இந்திய மூவர்ணக் கொடியை பறக்க செய்துள்ளார்.

Virat-Cinemapettai.jpg
Virat-Cinemapettai.jpg

உமர் ட்ராஸ்ன் இச்செய்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால் பாகிஸ்தான் அரசு அவர்களின் சட்டத்தில் 123-A என்ற பீனல் கோடின் கீழ் அதிக பட்ச தண்டனையாக பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. உமர் ட்ராஸ் நீதிபதியிடம், விராட் கோலிக்காகத்தான் இவ்வாறு செய்தேன், அவரின் தீவிர ரசிகன் நான் என்று எவ்வளவோ மன்றாடியும் அவர் கேட்கவில்லை. கோலிக்காக இப்படி ஒரு ரசிகர் சிறை சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Trending News