வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

வீட்டுக்குள் திருட்டுத்தனமாக வந்த கண்ணன்.. கன்னத்தில் அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. மூர்த்தி உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்னைக்கு சென்று திரும்புகின்றனர்.

அவர்கள் சென்னைக்கு சென்ற சமயத்தில் கடைக்குட்டி தம்பி கண்ணன் வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து சாவியை எடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை திறந்து வியாபாரம் செய்கிறார். இதை தெரிந்து கொண்ட மூர்த்தி கோபமாக கண்ணனை அழைத்து இது குறித்து விசாரிக்கிறார்.

கடையைத் திறந்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட கண்ணனை அடிக்க கை ஓங்குகிறார் மூர்த்தி. மூர்த்தியை தடுக்கும் தனம் கண்ணனுக்கு இந்த கடையில் முழு உரிமை இருக்கிறது என்று சமாதானம் செய்கிறார்.

கண்ணனின் இந்த செயலால் அதிர்ந்து நிற்கும் அண்ணன்கள் மூவரும் கண்ணனைப் பற்றி பேசிக் கொள்கின்றனர். அதில் ஜீவா, கண்ணன் இப்படி ஒரு காரியத்தை செய்வான் என்று என்னால் நம்ப முடியவில்லை என்று கூறுகிறார்.

இதற்கு மூர்த்தி கடையில் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை மாறாக கடை நல்ல லாபத்தில் தான் இருந்துள்ளது என்று கூறுகிறார். மேலும் நான் தான் அவனை அவசரப்பட்டு ரொம்பவும் திட்டி விட்டேன் என்று வருந்துகிறார். இதைக்கண்டு கதிர் மற்றும் ஜீவா இருவரும் புன்னகைக்கின்றனர். இவ்வாறு ப்ரோமோ காட்சிகள் முடிகிறது.

முதலில் அடித்துக் கொள்வதும் பின்னர் சமாதானம் ஆகி கொஞ்சி கொள்வதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஒன்றும் புதிதல்ல. இன்று கண்ணனின் செயலை ஏற்கும் மூர்த்தி சில நாட்களில் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுவார். ஆகமொத்தம் இப்போதைக்கு கண்ணனை வீட்டுக்குள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிகிறது.

எப்படியாவது அண்ணன் குடும்பத்தோடு சேர வேண்டும் என்று வீட்டுக்குள் திருட்டுத்தனமாக வந்த கண்ணன் இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாரோ?

Trending News