ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஆஸ்கார் நாயகனுடன் கைகோர்க்கும் பார்த்திபன். அவார்டு கன்பார்ம்.

இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என்று பன்முக திறமை கொண்டவர் நடிகர் பார்த்திபன். இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும்.

தற்போது வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் பார்த்திபன் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். அவரின் மாறுபட்ட நடிப்பில் வெளியான ஹவுஸ்ஃபுல் மற்றும் ஒத்த செருப்பு திரைப்படத்திற்காக அவர் இந்த விருதை பெற்று இருந்தார்.

மேலும் பார்த்திபன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அரசராக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தை பார்த்திபன் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று ரசிகர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டினார். இப்படத்திற்காக அவர் பிலிம்பேர் விருதினை பெற்றார்.

Parthiban-Cinemapettai.jpg
Parthiban-Cinemapettai.jpg

தற்போது பார்த்திபன் வித்தியாசமான முயற்சியில் இரவின் நிழல்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்க இருப்பதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார். இது தமிழ் சினிமாவில் முதல் முறையாக உருவாக்கப்படும் புதுமையான முயற்சி ஆகும்.

அதிலும் இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இதற்கு முன்பு 2001 ம் ஆண்டு ஏ ஆர் ரகுமான், பார்த்திபனுடன் ஏலேலோ என்ற திரைப்படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பார்த்திபன், ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைகிறது.

இந்த படத்தில் பார்த்திபன் ஒரு பாடலை அவரே எழுதியிருக்கிறார். பார்த்திபன் பாடல் எழுதுவது இது முதல் முறையல்ல ஏற்கனவே குடைக்குள் மழை, வித்தகன் போன்ற திரைப்படங்களில் இவர் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியில் உருவாகிவரும் இரவின் நிழல்கள் திரைப்படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News