வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

எலிமினேஷனிலிருந்து தப்பித்த வாயாடி.. அபினைக்கு சரியான ஆப்பு!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களுக்கு மேலாக கடந்துள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இதனால் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் போட்டிகளும் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் வீட்டில் இருக்கும் 11 பேரும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளதாக பிக்பாஸ் அறிவித்தார். அதன் பிறகு கொடுக்கப்படும் டாஸ்க்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்து எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரை சிபி, நிரூப் இவர்களைத் தொடர்ந்து தாமரைச்செல்வி எலிமினேஷனிலிருந்து தப்பித்துள்ளார், நேற்று நடைபெற்ற கடைசி டாஸ்க் தாமரைக்கும் அபினைக்கும் இடையே நடைபெற்றது. இதில் தாமரை செம்ம லாக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இதனால் டேஞ்சர் சோனில் இருந்த தாமரை மற்றும் அபினை இருவரில் அபினை வசமாக மாட்டிக் கொண்டார். ஏனென்றால் இணையத்தில் வெளியான ஓட்டின் அடிப்படையில் குறைந்த வாக்குகளைப் பெற்ற அபினை டாஸ்கில் வெற்றிபெற்று எலிமினேஷனிலிருந்து தப்பித்திருக்கலாம்.

ஆனால் அவ்வாறு நடைபெறாததால், இந்த வாரம் அபினை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே சுவாரசியம் குறைந்து நபராக கருதப்பட்ட அபினை, எலிமினேஷனிலிருந்து தப்பிப்பதற்காக நடத்தப்பட்ட டாஸ்க்கள் அனைத்திலும் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் பி.க் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News