திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படம் எப்படி இருக்கு? சினிமாபேட்டை ஒரு அலசல்

நாம என்னதான் விக்ரமன் படங்களை பார்த்து வளர்ந்திருந்தாலும், ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோ படங்களும் நம் கவனத்தை ஈர்க்கத்தான் செய்கின்றன. அந்த வரிசையில் இதுவரை வெளியான ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன் போன்ற பல சூப்பர் ஹீரோ படங்களை நாம் பார்த்து ரசித்திருப்போம். தமிழிலும் இதுபோன்ற சூப்பர் ஹீரோ படங்கள் வந்துள்ளன. ஆனால் இவை அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

சூப்பர் ஹீரோக்கள் படம் என்றாலே ஹாலிவுட் தான். அவர்கள் அளவிற்கு பிரம்மாண்டமாக யாராலும் படத்தை எடுக்க முடியாது. அந்த வகையில் தற்போது ஜோன் வாட்ஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம் (Spider Man : No Way Home). இதற்கு முன்பு வெளியான Spider Man Far from Home படத்தின் தொடர்ச்சி தான் இந்த படம்.

கதைப்படி பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர் மேன் என்பது அனைவருக்கும் தெரிந்து விடுவதால், பீட்டர் பார்க்கரும் அவரின் நண்பர்களும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். பல்கலைக்கழகத்தில்கூட இடம் கிடைக்கவில்லை. இதனால், தான்தான் ஸ்பைடர் மேன் என்பதை ஒட்டுமொத்த உலகமும் மறந்துவிடும்படி செய்ய டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் உதவி கேட்கிறார் பீட்டர்.

இந்நிலையில் அதற்கான முயற்சியில் அவர் ஈடுபடும்போது ஏற்படும் கோளாறு காரணமாக பல்வேறு பிரபஞ்சங்கள் திறந்து அங்கிருந்து க்ரீன் காப்லின், மணல் மனிதன், மின்சார மனிதன், பல்லி மனிதன் போன்றவர்கள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்துவிடுகிறார்கள். அவர்கள் இதே பிரபஞ்சத்தில் இருந்து அட்டகாசம் செய்யவும் விரும்புகிறார்கள்.

இதனையடுத்து டாக்டர் ஸ்ட்ரேஞ் உதவியுடன் ஸ்பைடர் மேன் அவர்களை திருப்பி அனுப்பினாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை. வழக்கம்போல் முந்தைய பாகங்களை போலவே இந்த படமும் சிறப்பாக உருவாகியுள்ளது. கதைக்களம் மட்டுமல்லாமல் நடிகர்களும் சிறப்பாக அவர்களின் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

மேலும் படத்தில் சிறந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. படம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளதோ அதேபோல் படத்தின் வசூலும் பிரம்மாண்மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டின் ஒரு சிறந்த படமாக இப்படம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -spot_img

Trending News