புதன்கிழமை, ஜனவரி 1, 2025

சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த சீரியல் பிரபலங்கள்.. முதலிடத்தை பிடித்த பாரதி கண்ணம்மா!

வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ, அதே அளவுக்கு சின்னத்திரை பிரபலங்களும் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ளன. அந்த வகையில் அனுதினமும் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கென்றே இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை தொலைக்காட்சி முன்பு காத்துக்கிடக்கின்றனர்.

எனவே ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் நடிகைகள் யார் என்ற கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அதில் மக்களின் மனதை அதிகமாக கவர்ந்து சீரியல் நடிகைகளில் முதலிடத்தை பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகி கண்ணம்மா பிடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சன் டிவியின் ரோஜா சீரியலின் கதாநாயகி ரோஜா பெற்றுள்ளார். மூன்றாமிடம் மீண்டும் விஜய் டிவியில் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகி பாக்கியலட்சுமிக்கு கிடைத்துள்ளது. அதைப்போல் நான்காம் இடம் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதாநாயகி தனம் பெற்றுள்ளார்.

மேலும் ஐந்தாமிடம் சன் டிவியின் சுந்தரி சீரியலின் கதாநாயகி சுந்தரிக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு சீரியல்களைப் போன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கும் சின்னத்திரை பிரபலங்களில் யார் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்துள்ளார் என்ற பட்டியலும் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் முதலிடத்தை விஜய் டிவியின் மாகாபா ஆனந்த் பெற்றுள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார்.

அதைப்போல் இரண்டாமிடம் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான பிரியங்கா பெற்றுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களை என்டர்டைன்மென்ட் செய்துகொண்டிருக்கிறார். மேலும் இந்த வரிசையில் 3, 4, 5-ஆம் இடங்களை குக் வித் கோமாளியின் பிரபலங்களான சிவாங்கி, புகழ், பாலா பெற்றுள்ளனர்.

Trending News