சமீபகாலமாக ஒரு திரைப்படத்தின் பாடல்கள் (ஓ சொல்றியா மாமா) பேமஸாக இருந்தால் அதை பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல.
இப்படி வெளியாகும் பல ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் சாமி சாமி என்ற பாடல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த பாடலுக்கு பலரும் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா ஆடுவதை போல் நடனமாடி அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். இதே படத்தில் நடிகை சமந்தாவின் நடனத்தில் ஒரு குத்தாட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை பலர் எதிர்த்தாலும் சிலர் அதை ரசிக்கவே செய்தனர்.
இந்த சர்ச்சையான பாடலுக்கு இணையதளத்தில் தன்னுடைய வீடியோக்கள் மூலம் கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் தமிழ்ச்செல்வி நடனமாடியுள்ளார். இவரை பலருக்கும் நினைவிருக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு இணையதளத்தில் அவருடைய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதாவது உள்ளாடை வெளியே தெரியும்படி அணிந்து கொண்டு, அது 2000 ரூபாய்க்கு வாங்கியது, அதனால் இப்படித்தான் அணிவேன் என்று பேசி பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார். அதன்பிறகும் அவர் அடங்காமல் தொடர்ந்து கிளாமரான பாடலுக்கு அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடுவது, உடல் பாகங்கள் வெளியே தெரியும்படி ஆடை அணிவது என்று வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
தற்போது இந்த புஷ்பா படத்தின் பாடலில் அவர் சமந்தாவே பரவாயில்லை எனும் அளவுக்கு ஹாட்டாக டான்ஸ் ஆடியுள்ளார். பெண்ணியம் பற்றி பாடல் பாடிய பாரதியாரே கண்ணை மூடிக் கொள்ளும் அளவுக்கு ஆபாசமாக நடந்து கொள்ளும் இந்த மாதிரி பெண்களால் மற்ற பெண்களுக்கும் தலைகுனிவு ஏற்படுகிறது.
பெண்ணுக்கு சுதந்திரம் உண்டு, நான் இப்படித்தான் உடை அணிவேன், ஆபாசம் பார்க்கும் கண்களில் தான் இருக்கிறது என்று சிலர் கூறினாலும், மற்றவர்கள் சலனப்படம் அளவுக்கு நடந்து கொள்வதில் இதுபோன்ற பெண்களுக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.
சோஷியல் மீடியாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ள தற்போதைய காலகட்டத்தில் சில பெண்கள் இது போன்று வரம்பு மீறிச் செல்வதை நாம் காண முடிகிறது. பெண்ணியத்தை பற்றி சரியான புரிதல் இல்லாமல் அவர்கள் செய்யும் இந்த தவறு வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு தாய் தன் மகனுக்கு பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் என கூறும் பெண்கள் தங்களை எப்படி மரியாதையாக பிறரிடம் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.