வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

லூசு முத்திப் போன வில்லி வெண்பா.. எங்களுக்கும் உங்கள பாக்க கஷ்டமா தான் இருக்கு

விஜய் டிவியில் பிரைம் தொடரில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஃபரினா. அண்மையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இவருடைய கர்ப்ப காலம் முழுவதும் இடைவெளி எடுக்காமல் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்தார். இவருடைய பிரசவத்திற்கு மட்டும் ஒரு மாதம் விடுப்பு எடுத்து மீண்டும் இத்தொடரில் நடித்து வருகிறார். மற்ற தொடர்களில் இதுபோன்ற ஒருவருக்கு இடைவெளி தேவைப்பட்டால் அவருக்கு பதிலாக மற்றொருவரை மாற்றிவிடுவார்கள்.

ஆனால் பாரதிகண்ணம்மா தொடரில் கதாநாயகி ரோஷினியை மாற்றினாலும் வில்லி வெண்பாவை மாற்ற இயக்குனருக்கு விருப்பமில்லை. ஏனென்றால் வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரீனாவால் மட்டுமே நடிக்க முடியும். இப்படி ஒரு வில்லியை யாராலும் பார்த்திருக்க முடியாது என்ற அளவுக்கு நடித்து அசத்தி உள்ளார்.

இவருடைய பிரசவ காலத்தின் போது வெண்பா ஜெயிலில் இருப்பது போல் தொடரில் காண்பிக்கப்பட்டது. தற்போது ஃபரீனா நடிக்க வந்த உடன் பாரதிகண்ணம்மா தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது பாரதி, கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் இருப்பதால் அவர்களை பிரிக்க பல முயற்சி செய்கிறார் வெண்பா.

இதனால் எப்போதும் போல பாரதியை பேசி உசுப்பேற்றிகிறார் வெண்பா. இதனால் கோபமடைந்த பாரதி வெண்பாவை அடித்து விடுகிறார். பல முயற்சிகள் செய்தும் பாரதி, கண்ணம்மா இருவரையும் பிரிக்க முடியவில்லை என்பதால் தற்போது பைத்தியம் ஆகி உள்ளார் வெண்பா.

யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல யாருமே இல்லாத அறையில் வெண்பா மருத்துவம் பார்க்கிறார். இதைப் பார்த்த வில்லனும், வெண்பாவின் வேலைக்காரியும் அதிர்ச்சி அடைகிறார்கள். இதைப்பார்த்த வெண்பா ரசிகர்கள் எங்களுக்கே உங்கள இப்படி பாக்க கஷ்டமா இருக்கு என்று கதறுகிறார்கள்.

Trending News