சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தனுஷின் விவாகரத்து அறிவிப்பால் ஏற்படப்போகும் விளைவு.. ஓபனாக பேசிய பிரபலம்

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் பரபரப்பாக பேசும் ஒரு விஷயம் ஐஸ்வர்யா, தனுஷ் விவாகரத்து அறிவிப்பு பற்றி தான். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபல நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்கிற அந்தஸ்தை தனுஷ் இறக்கி வைக்க முடிவு செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அவர்களின் விவாகரத்து அறிவிப்புக்கு என்ன காரணம் என்று அனைவரும் ஆர்வத்துடன் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சம்மந்தப்பட்டவர்கள் எந்த தெளிவான விளக்கத்தையும் இதுவரை கொடுக்கவில்லை.

இருப்பினும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. தனுஷ், ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பை பற்றி தயாரிப்பாளர் கே ராஜன் சில கருத்துகளை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது இப்படி ஒரு முடிவை நிச்சயம் எடுத்து இருக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகளுக்காக அவர்கள் விட்டுக் கொடுத்து இருக்க வேண்டும்.

மேலும் தனுஷ் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது அவருடைய எதிர்கால சினிமா வாழ்க்கையை கட்டாயம் பாதிக்கும். தன் சொந்த வாழ்வில் சரியாக இருக்க முடியாத ஒருவர் எப்படி திரையில் ஹீரோவாக ஜெயிக்க முடியும் என்ற கேள்வியையும் அவர் கேட்டுள்ளார்.

சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் இந்த நடிகர்களின் வாழ்க்கையை பார்த்து தான் அவர்களின் ரசிகர்களும் பின்பற்றுவார்கள். நடிகர் தனுஷை பற்றி பல வதந்திகள் வந்து இருந்தாலும் அவர் தன்னுடைய வாழ்க்கை பொறுப்பில் இருந்து விலகுவது சரியல்ல.

பாக்யராஜ் ,பூர்ணிமா, சூர்யா, ஜோதிகா போன்ற நட்சத்திர தம்பதிகள் அனைவரும் சிறப்பாக மண வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது தனுஷின் இந்த முடிவு ஏற்புடையது அல்ல. வினை விதைத்தவன் வினை அறுப்பான், உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்று அவர் தனுஷின் விவாகரத்து அறிவிப்பு பற்றி காட்டமாக தெரிவித்துள்ளார்.

தனுஷ் சினிமா துறையில் இவ்வளவு உயரம் அடைந்ததற்கு அவருடைய நடிப்பும், உழைப்பும் ஒரு காரணமாக இருந்தாலும் அவர் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்கிற அந்தப் பெருமை முக்கிய காரணமாக இருந்தது. அதை தற்போது தூக்கி எறிய துணிந்திருக்கும் தனுஷிற்கு எதிர்கால சினிமா வாழ்வு நிச்சயம் கேள்விக்குறியாக மாற வாய்ப்பு இருக்கிறது.

Trending News