திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அடிக்கடி மாட்டிகொள்ளும் சிம்பு.. தனுஷ் மட்டும் நாசூக்கா சில்மிஷம் பண்ண இதான் காரணம்

தமிழ் சினிமாவில் அதிகம் கிசுகிசு பேசப்பட்ட ஒரு நபர் என்றால் அது நடிகர் சிம்புதான். பொதுவாக சிம்பு எந்த படத்தில் நடித்தாலும் அவருடன் நடித்த ஹீரோயினுடன் கிசுகிசு வருவது வழக்கமாக உள்ளது. ஆரம்பத்தில் சிம்பு, நயன்தாராவுடன் நெருக்கமாக இருப்பதுபோல் கிசுகிசு பேசப்பட்டது.

நயன்தாராவை தொடர்ந்து ஹன்சிகா என சிம்புவின் லிஸ்ட் பெரிதாக போய்க்கொண்டே இருந்தது. சென்ற ஆண்டு வெளியான ஈஸ்வரன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்த நிதி அகர்வாலுடன் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சிம்பு என்றாலே கிசுகிசு என்ற அளவுக்கு திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால் தப்பு பண்ணினாலும் தடையும் இல்லாமல் பண்ணனும் என்பது போல தனுஷின் மன்மதலீலைகள் வெளியில் தெரிவதில்லை. சிம்புவை விட தனுஷின் படங்களில் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அதிகமாக இடம்பெற்று வருகிறது.

ஆரம்பத்தில் சினேகா, சோனியா அகர்வால், முதல் ஸ்ருதிஹாசன், அமலாபால், சமந்தா என படங்களிலேயே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக நடித்துள்ளார். ஆனால் இவர்களை இணைத்து கிசுகிசு வராததற்கு காரணம் சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ் என்பதால் தான்.

பெரிய அந்தஸ்தில் உள்ள தனுஷின் தவறுகள் வெளியில் தெரியவில்லை. ஆனால் இவற்றை ஓரளவு பொருத்துக்கொண்டு தனுஷின் மனைவி ஐஸ்வர்யா மேலும் மேலும் இது போன்ற தவறுகளால் தனுஷிடம் இருந்து நிரந்தரமாக பிரிய முடிவு எடுத்துள்ளார்.

தற்போது சிம்பு கூட ஓரளவு திருந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் சிம்பு தற்போது ஒரு நடிகையுடன் தனி வீட்டில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் சிம்புவின் மன்மதன் இடத்தை தற்போது தனுஷ் கரம் பிடித்து விட்டார்.

Trending News