வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

படுத்த படுக்கையான அப்பா.. இப்பவும் அந்த விஷயத்தில் கிறுக்குப் பிடித்து அலையும் கோபி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் கல்யாணமாகி மூன்று பிள்ளைக்கு தகப்பனான கோபி தன்னுடைய கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார்.

ஆனால் கோபியின் மூத்த மகன் செழியனுக்கு திருமணம் ஆன நிலையில் தற்போது கோபிக்கு இப்ப கல்யாணம் தேவையா என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். கோபி ராதிகாவுடன் பழகுவது கோபியின் அப்பா ராமமூர்த்திக்கு ஏற்கனவே தெரிந்த நிலையில் இப்போது இவர்களுக்கு திருமணம் ஆக உள்ளது ராதிகாவின் மகள் மயூ மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராமமூர்த்தி மாடிக்கு சென்று கோபியிடம் கடும் கோபத்தில் பேசினார். எதற்கும் அலட்டிக் கொள்ளாத கோபியை இனியும் சும்மா விடக்கூடாது என நினைத்து எல்லோரிடமும் உண்மையை சொல்ல போகிறேன் என மாடியிலிருந்து கீழே இறங்குகிறார் ராமமூர்த்தி.

அப்போது மாடியிலிருந்து தவறி விழுந்த ராமமூர்த்திக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாக்கியலட்சுமி குடும்பமே மிகுந்த மன கஷ்டத்தில் உள்ளார்கள். இதனால் கோபி மருத்துவமனைக்கு வரும் பொழுது வாய் பேச முடியாத நிலையில் இருக்கும் ராமமூர்த்தி பாக்கியாவிடம், கோபியை கைநீட்டி ஜாடை காட்டுகிறார்.

ஆனால் பாக்யாவுக்கு எதுவுமே புரிந்து கொள்ள முடியவில்லை. வெளியே வந்த கோபி, சுறுசுறுப்பாக இருக்கும் அப்பா படுத்த படுக்கையானதற்கு காரணம் நான்தான் என வருத்தப்படுகிறார். கோபியின் மகள் இனியா தாத்தா சரி ஆகி விடுவார்களா என கேட்கிறாள்.

நிச்சயம் தாத்தா சரியாகி விடுவார் என இனியாவுக்கு கோபி ஆறுதல் சொல்கிறார். என்னதான் கோபிக்கு ஒருபுறம் வருத்தம் இருந்தாலும் தன் விஷயம் அப்பாவுக்கு மட்டுமே தெரிந்த நிலையில் அவருக்கு இப்படி ஆனதால் ராதிகாவை திருமணம் செய்வதில் இனி எந்த பிரச்சனையும் இருக்காது என ஆறுதல் அடைகிறார். அப்பா படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் இன்னும் ராதிகா விஷயத்தில் கிறுக்கு பிடித்த அலைகிறார் கோபி.

Trending News