சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இப்போ என் ஆளை தொட்டுப்பாரு.? கடுப்பான ஸ்டாலின்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் என்றாலே தள்ளு முள்ளுவிற்கு பஞ்சம் இருக்காது அப்படி வாக்குப்பதிவின் போது ஆளுங்கட்சியான திமுகவுக்கும் மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் சில இடங்களில் மோதல்கள் பிரச்னைகள் என வெடித்தது.

அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக-வினர் ராயபுரத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், திமுக நிர்வாகி ஒருவரை கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி, அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்று கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது, அதிமுகவினர் ஒருவரை பார்த்து இவர் ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, கள்ள வாக்கு செலுத்த இங்கு வந்ததாகக் கூறி அவரை சுற்றிவளைத்தனர். இந்த தகவலறிந்து அந்த இடத்துக்கு முந்திக்கொண்டு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார்.

பின்னர், அங்கிருந்த அதிமுகவினரிடம் அந்த நபரை காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார். அதன்பின் அதிமுக-வினர் அந்த நபரை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல், அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர். அதிமுகவினர் கொடூரமாக அவரை தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்திலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தின் காரணமாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 40 பேர் மீது, தாக்குதலுக்கு உள்ளான நரேஷ் என்ற அந்த நபர் அரை நிர்வாணப்படுத்தி தன்னை தாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

சட்ட விதிகளை பின்பற்றாத அதிமுகவினர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக தோல்வி பயத்தில் செய்வதறியாது செய்து வருகிறது என்று அதிமுக தரப்பில் விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

Trending News