சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அப்பப்பா எவ்வளவு டிசைன்ஸ்.. திரும்பவும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட ஸ்ரேயா – வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ரியல் லைப்பிலும் திருமண ஜோடியாக மாறியவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா.

சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரஜினி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து தி நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கோல்ட் ஷாப்பிங் செய்துள்ளனர். எண்ணற்ற டிசைனில் எக்கச்சக்கமான தங்க நகைகளை பார்த்ததும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டு உள்ளார் ஸ்ரேயா.

மேலும் பூஜையறைக்கு தேவையான வெள்ளியிலான பூஜை பாத்திரங்களை பார்த்து வியந்துள்ளனர். வேலைப்பாடுகள் அதிகம் நிறைந்த அழகிய வெள்ளிப் பாத்திரங்களையும் ஷாப்பிங் செய்துள்ளனர். ஒரு பூஜை அறையை வெள்ளிப் பொருட்கள் அலங்கரிக்கத் தேவையான அனைத்தும் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமில் கிடைக்கிறது. இந்த ஷோ ரூமில் 92.5 பியூரெட்டியில் வெள்ளி நகைகள், அணிகலன்கள், பூஜை பொருட்கள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங்கின் போது சித்து மிகப் பெரிய குத்து விளக்கைப் பார்த்து அங்க பாரு என சொல்ல நம்ம வீட்டுக்கு அவ்வளவு பெரிய குத்துவிளக்கு வேண்டாம் நான்தான் இருக்கேனே என ஸ்ரேயா பஞ்ச் போட இந்தச் சேராலே என்னை அடிங்க என கலாட்டா செய்துள்ளார்.

ஆன்டிக் தங்கத்திலான பூஜை பொருட்களையும் இவர்கள் பார்த்து வியந்துள்ளனர். தங்கம் மற்றும் ஆன்ட்டிக் தங்கத்திலான கம்மல் ஒட்டியானம், நெக்லஸ் என அனைத்தையும் அணிந்து பார்த்து வியந்து ஷாப்பிங் செய்துள்ளனர். எங்கும் கிடைக்காத கலெக்ஷன் மற்றும் நியாயமான விலையில் தங்க நகைகளை ஷாப்பிங் செய்ததாக கூறியுள்ளனர். இதோ அந்த வீடியோ

Trending News