1. Home
  2. கோலிவுட்

அஜித்தை இயக்கப் போகும் படத்தைப் பற்றி பேசிய விக்னேஷ் சிவன்.. இப்படி சொன்னா எப்படி பாஸ்

அஜித்தை இயக்கப் போகும் படத்தைப் பற்றி பேசிய விக்னேஷ் சிவன்.. இப்படி சொன்னா எப்படி பாஸ்

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது,. அதன் பிறகு அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏகே 62 திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த வருட இறுதியில் ஏகே 62 படப்பிடிப்பு துவங்கப் போவதாக படக்குழு திட்டமிட்டிருக்கிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இடம் தல  அஜித் படத்தை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு விக்னேஷ் சிவன், 'அஜித் சார் ரசிகர்களுக்கு சில விஷயங்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதேபோல் என்னோட பாணியிலும் படம் இருக்க வேண்டும். இதுதான் இந்த படத்தில் இருக்கும்' என கூறினார். மேலும் தோனிகூறியது போல நம்மால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்வோம். வெற்றி தோல்வி நம் கையில் இல்லை என விக்னேஷ் சிவன் அந்தப் பேட்டியில் கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் படம் உருவாதற்கு முன்பே கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாமல் பேசுகிறாரே என கூறி வருகின்றனர். ஆனால் விக்னேஷ் சிவன் கண்டிப்பாக இந்த படத்திற்கு சில விஷயங்கள் சேர்த்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர். எனவே ஏகே 62 படத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த அஜித்குமார், ஊருக்கே சாப்பாடு போடும் அளவிற்கு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், மிகப்பெரிய ஹோட்டலை ஆரம்பித்து கொடிகட்டி பறக்கிறார். அவருடைய இந்த வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்ப்பரேட் வில்லனை பழிவாங்குவது தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை என்ன சோஷியல் மீடியாவில் ரசிகர்களால் பேசப்படுகிறது. சிலர் இதை புரளி என்றும் கமெண்ட் அடிக்கின்றனர். இப்படி ரசிகர்களிடையே தல அஜித் ஏகே 62 படத்திற்குரிய அப்டேட் அறிந்து கொள்ள அதிக ஆர்வம் இருக்கும் நிலையில், படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் பொறுப்பில்லாமல் இப்படி எல்லாம் படத்தைக் குறித்து பேசுவது தல ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.