புதன்கிழமை, மார்ச் 19, 2025

சக்சஸ் கொடுக்க போராடும் விஜய் சேதுபதி.. வெற்றிக் கூட்டணியில் இணையும் அடுத்த படம்

ஹீரோ, வில்லன் என வருஷத்திற்கு 4 முதல் 5 படங்களாவது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிறது. தன்னை நாடி வரும் இயக்குனர்கள் அனைவருக்கும் கால்ஷீட் கொடுத்து பிஸியாக நடித்து வருகிறார். தற்போது கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் 5 படத்தில் கமிட்டாகி உள்ளாராம்.

இவ்வாறு பல படங்களில் பிஸியாக உள்ள விஜய் சேதுபதி தன்னுடைய பழைய இயக்குனர் ஒருவருக்கு தற்போது வாய்ப்பு கொடுத்துள்ளார். அதுவும் நீங்கள் கதையெல்லாம் சொல்ல தேவையே இல்லை எப்போது சூட்டிங் மட்டும் சொல்லுங்கள் நான் நேராக வந்து படப்பிடிப்பிலேயே கலந்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாராம்.

அப்படிப்பட்ட இயக்குனர் யார் என்றால் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் தான். திரிஷா, விஜய் சேதுபதி இடையிலான அற்புதமான காதல் கதையாக 96 படம் ரசிகர்களின் மனதை உலுக்கி எடுத்தது. மீண்டும் இது போன்ற ஒரு படத்திற்காக தமிழ் சினிமா காத்திருக்கிறது.

இந்நிலையில் பிரேம்குமார் தற்போது தெலுங்கு படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அதெல்லாம் சுத்த பொய்யாம். அதாவது பிரேம்குமார் விஜய் சேதுபதிகாக ஒரு கதையை ரெடி செய்து அதை மெருகேற்றிக் கொண்டிருக்கிறாராம்.

கண்டிப்பாக இந்தப் படமும் 96 படத்திற்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி எவ்வளவு படங்கள் கையில் இருந்தாலும் உங்கள் படத்தை முதலில் முடித்துக் கொடுப்பேன் என்று கங்கணம் கட்டி திரிகிறாராம்.

இதனால் விஜய் சேதுபதி மற்ற படங்களை சற்று ஒதுக்கி வைத்து விட்டு பிரேம்குமார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவலும் மற்ற நடிகர், நடிகைகளின் பெயரும் மிக விரைவில் வெளியாகும். இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News