ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

வம்சிக்கு பயத்தை காட்டிய லோகேஷ்.. தளபதி 66ஐ விட எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தளபதி 67

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இந்த திரைப்படத்தை தற்போது ஓவர்டேக் செய்யும் அளவுக்கு தளபதி 67 திரைப்படத்தைப் பற்றிய பேச்சுதான் எங்கும் பரவி வருகிறது. விஜய் இந்தத் திரைப்படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார்.

தற்போது விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் ரசிகர்களின் பாராட்டு மழையில் இருக்கும் லோகேஷ் அடுத்ததாக விஜய்க்கு ஒரு மாஸான கதையை ரெடி செய்து உள்ளார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டுக்காக பெரிதும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

இதனால் தளபதி 66 திரைப்படத்தை பற்றி அவர்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு லோகேஷ் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளார். இதனால் தளபதி 66 படத்தை இயக்கும் வம்சி தற்போது பயத்தின் உச்சிக்கே சென்று உள்ளார்.

மேலும் அவர் விஜய் இதுவரை நடித்த படங்களின் இயக்குனர்களை போல் இல்லாமல் இந்த படத்தின் கதைக்காக மட்டுமே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் செலவழித்துள்ளார். அந்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் அவர் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார்.

இருப்பினும் ரசிகர்கள் லோகேஷ், விஜய் கூட்டணியை பெரிதும் எதிர்பார்ப்பதால் வம்சி தளபதி 66 திரைப்படத்தை இன்னும் சுவாரஸ்யத்துடன் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக பல காட்சிகளையும் அவர் மெனக்கெட்டு செய்து வருகிறாராம்.

அந்த வகையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இதற்காக படக்குழு இப்போதிலிருந்தே அதற்கான ஏற்பாடுகளை பரபரப்புடன் செய்து வருகிறது.

Trending News