ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

நயன்தாராவிற்கு விக்கி கொடுத்த திருமண பரிசு.. சளைத்தவள் அல்ல என காட்டிய நயன்!

ஆறு வருடங்களாக காதலித்து கொண்டிருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரெசார்ட் ஒன்றில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, இயக்குனர் மணிரத்னம், அஜித், சூர்யா, தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்து அவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க விக்கி, நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய அழகான தருணம் தற்போது சோஷியல் மீடியாவில் அவர்களது திருமணம் முடிந்த நிலையிலும் அதிகமாக பகிரப்பட்டு கொண்டிருக்கிறது. இதுமட்டுமின்றி எங்குபார்த்தாலும் விக்கி-நயன் திருமணத்தைப்பற்றிய பேச்சுதான்.

திருமணத்தில் விருந்தினராக வந்தவர்கள் பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கம் தான். ஆனால் கணவன் மனைவியான விக்கி-நயன் இருவருமே மாறி மாறி அவர்களுக்குள்ளேயே விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளனர். அதாவது விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது தன்னுடைய மனைவி நயன்தாராவிற்கு ரூபாய் 3 கோடி மதிப்புள்ள தங்க நகையையும், ரூபாய் 5 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசாக காதல் மனைவிக்கு அளித்துள்ளார்.

இதை பெற்றுக்கொண்ட நயன்தாராவும் பாசத்திலும் பணத்திலும் சளைத்தவள் அல்ல என்பதை காட்டுவதற்காக 20 கோடி மதிப்புள்ள பங்களாவை காதல் கணவன் விக்னேஷ் சிவனுக்கு பரிசளித்து இருக்கிறார். இப்படி கோடிக்கணக்கில் தங்களுக்குள்ளே பரிமாறிக் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியர்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

இதுமட்டுமல்ல இவர்களது திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் நயன்-விக்கி தங்களுடைய திருமணத்திற்கு வந்ததற்கு நன்றிகளை தெரிவித்து மட்டுமல்லாமல், தங்கம் வெள்ளி பரிசு பொருட்கள் அடங்கிய தாம்பூலப்பை கொடுத்திருக்கின்றனர். இவ்வளவு ஆடம்பரமாக நடத்தப்பட்ட திருமணத்தை முடித்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புதுமணத் தம்பதியர்கள் திருப்பதி சென்றுள்ளனர்.

இதன்பிறகு ஹனிமூன் பற்றிய எந்த திட்டமும் இதுவரை வெளிவராததால் இன்னும் ஒரு சில வாரத்தில் நயன்தாரா, ஷாருக்கான் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதால் அந்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள கிளம்பிவிடுவார். இதன் பிறகு பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் கனவோடு கிளம்பியிருக்கும் நயன்தாரா மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பாரா அல்லது பாலிவுட்டிலே செட்டிலாகி விடுவாரா என ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது

Trending News