பேட்மேன், விக்ரம் ரெண்டுமே ஒன்னு.. பேட்டியில் கமலை கொண்டாடிய பிரபல மலையாள நடிகர்

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை புகழாத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என கொண்டாடும் படமாக லோகேஷ் கனகராஜுன் விக்ரம் படம் அமைந்துள்ளது. மேலும் 4 வாரங்கள் கடந்தும் தற்போது 400 கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பிரித்விராஜ். இவர் தற்போது மலையாளத்தில் கடுவா என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊடகங்களுக்கு பிரித்விராஜ் பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்தப் பேட்டியில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மூன்றிலும் ஒருவரால் எப்படி ஒரே நேரத்தில் பயணிக்க முடிகிறது என அந்த பேட்டியாளரின் கேள்விக்கு சுவாரசியமான பதிலை பிரித்விராஜ் அளித்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் இருந்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்களே.

என்னுடைய இன்ஸ்பிரேஷன் உலகநாயகன் கமலஹாசன். அவர் ஒரு காட்சியில் நடிப்பதை நாங்கள் 20 டேக்குகள் எடுத்து நடிக்க வேண்டும். மேலும் கமலஹாசன் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே நான் பார்த்துள்ளேன் என பிரித்திவிராஜ் கூறினார்.

மேலும், தற்போது வெளியான விக்ரம் படத்தில் முழுவதுமாக கமலின் காட்சிகள் இடம்பெறவில்லை என்றாலும் படம் முழுக்க விக்ரமை மையமாக வைத்துதான் எடுக்கப்பட்டது. அதுபோல்தான் கிறிஸ்டோபரின் பேட்மேன் படமும், லோகேஷின் விக்ரம் படமும் ஒன்று தான். அதாவது படத்தில் அவர்கள் காட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களைப் பற்றிய கதை நகரும்.

நான் இயக்கிய லூசிஃபர் படத்திலும் மோகன்லால் 45 நிமிடங்கள் மட்டும் தான் நடித்திருப்பார். ஆனால் கதை முழுக்க அவரை மையப்படுத்தி தான் இருக்கும். இதனால் ஒருவர் எவ்வளவு நேரம் வரார்னு முக்கியமல்ல, வர நேரத்துல எவ்வளவு தாக்கம் ஏற்படுகிறது என்பது தான் முக்கியம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →