1. Home
  2. கோலிவுட்

ஸ்ரீநிதி சொன்னதை மீறி திருமணத்தை நடத்திய சீரியல் நடிகை .. திடீர் திருமணத்திற்கு இதான் காரணமா

ஸ்ரீநிதி சொன்னதை மீறி திருமணத்தை நடத்திய சீரியல் நடிகை .. திடீர் திருமணத்திற்கு இதான் காரணமா

பிரபல சீரியல் நடிகையின் திருமணம் நேற்று அவசர அவசரமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான நடிகை நட்சத்திரா, அதில் பிரபலமாகி அதைத் தொடர்ந்து தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நட்சத்திரா, யாரடி நீ மோகினி சீரியல் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரீநிதி உடன் நட்பில் இருந்தார். கடந்த சில மாதங்களாகவே ஸ்ரீநிதி மன அழுத்தத்தின் காரணமாக ஏதேதோ சோஷியல் மீடியாவில் உளறிக் கொண்டிருக்கிறார். அப்படி தான் நட்சத்திரா காதலிக்கும் நபர் சரியானவர் அல்ல. அவருடன் நட்சத்திராவுக்கு திருமணம் நடந்தால், நடிகை சித்ராவின் நிலைதான் ஏற்படும். அவரைக் காப்பாற்ற வேண்டும் என பெரிய பிரச்சனை செய்தார். அதன்பிறகு நட்சத்திராவும் இதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். நடிகை நட்சத்திரா நீண்ட நாட்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து கொண்டிருந்த விஷ்வா என்பவரை காதலித்த நிலையில், இருவருக்கும் தற்போது திருமணம் நடந்திருக்கிறது. இவருடைய திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொல்லாமல் கொள்ளாமல் திடீர் திருமணம் செய்து கொண்டதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இதற்கு நட்சத்திரா எந்த பதிலும் அளிக்காத நிலையில், இதுகுறித்து விசாரித்தபோது நட்சத்திராவை தூக்கி வளர்த்த தாத்தா தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவர் ஆசைக்காக உடனடியாக நட்சத்ரா-விஷ்வா திருமணத்தை நடத்தி முடித்து வைக்கின்றனர். ஸ்ரீநிதி சொன்னதை மீறி திருமணத்தை நடத்திய சீரியல் நடிகை .. திடீர் திருமணத்திற்கு இதான் காரணமா serial-actress-nakshathra-marriage-cinemapettai
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.