சிம்பு இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். செப்டம்பர் 15ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடுக்குப் படத்துக்கு பின் சிம்புவின் மார்க்கெட் பெரிய லெவலில் மாறியது.
ஏற்கனவே சிம்பு மீது பல பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டது. அதையெல்லாம் தவிடு பொடியாக்கி சிம்பு இப்பொழுது பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். பழைய பெயர்களை எல்லாம் மாற்றி இப்பொழுது சிம்பு அப்படி இல்லை என்ற ஒரு நிலைமைக்கு வந்து விட்டார்.
இப்படி போய் கொண்டு இருக்கையில் அவர் ஏற்கனவே கமிட்டாகி கால்சீட் கொடுத்த படம் கொரோனா குமார். கொரோனா பிடியில் சிக்கிய முதல் மனிதனை வைத்து எடுக்கப்போகும் ஒரு படம் தான் கொரோன குமார்.
மாநாடு படத்திற்கு பின் சிம்பு தனது சம்பளத்தை பல கோடிகள் உயர்த்தி விட்டார். கொரோனா குமார் படத்தை ஒத்துக் கொள்ளும் போது சிம்புவின் சம்பளமும் குறைவு. அதனால் பழைய சம்பளமே பேசி இருப்பதாக தெரிகிறது.
இப்பொழுது சிம்பு மார்க்கெட் எங்கேயோ போய் விட்டது அதனால் பழைய சம்பளத்தை வாங்க முடியாது என்று சிம்பு தரப்பு திட்டவட்டமாக கூறியது. இருந்தாலும் சிம்பு ஒரு கணிசமான தொகையை சம்பளமாக கேட்டு படத்தில் நடிப்பதாக ஒத்துக்கொண்டார்.
இப்பொழுது கொரோனா குமார் படத்தின் இருந்து சிம்பு விலகியதாக ஒரு செய்தி வந்துள்ளது. இதற்காக காரணம் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமா, அல்லது சம்பளத்தில் பின்னணியில் ஏதாவது மனகஷ்டம் ஏற்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் சிம்பு இந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதியாக வந்த தகவல்.