வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பெரிய ஆஃபர் கொடுத்தும் மதிக்காத சந்தானம்.. தூது புறாவாய் சென்ற ஆர்யா!

நகைச்சுவை நடிகராக தனது கேரியரை தொடங்கிய சந்தானம் சிம்புவுடன் சேர்ந்து காதல் அழிவதில்லை, அலை, மன்மதன், வல்லவன் போன்ற படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார்.

அதன்பிறகு படிப்படியாக காமெடி நடிகராக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சந்தானம், முதன் முதலாக ஹீரோவாக கடந்த 2014 ஆம் ஆண்டு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பிறகு இனிமேல் இப்படிதான், டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி போன்ற பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இந்தப் படங்கள் எல்லாம் சந்தானம் நினைத்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என சந்தானம் அடம் பிடித்துக் கொண்டிருக்கையில், இப்போது பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருக்கின்றனர்.

ஆர்யா-நயன்தாரா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படம் ஹிட் ஆனதற்கு சந்தானமும் ஒரு காரணம். இப்பொழுது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் காமெடியனாக நடிப்பாரா என்பது தான் சந்தேகம்.

இதனால் இப்பொழுது ஆர்யா அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தூது புறாவாய் சந்தானத்தை தாஜா செய்து வருகிறார். சந்தானம் இந்தப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தால் நிச்சயம் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்கலாம்.

ஆனால் கதாநாயகனாக நடித்த பிறகு மீண்டும் காமெடியனாக நடிக்க சந்தானம் ஒத்துக்கொள்ள மாட்டார். இருந்தாலும் டைமிங், டைமிங் காமெடியில் பின்னி பெடலெடுக்கும் சந்தானத்தை நகைச்சுவை நடிகராகவே பார்க்க விரும்பும் ரசிகர்களுக்காக அவர் அந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

- Advertisement -

Trending News