வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஒதுக்கி தண்ணி காட்டும் தமிழ் சினிமா.. ரஜினி படத்திற்காக காத்து கொண்டிருக்கும் மாஸ் நடிகை

தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு அதன் பிறகு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. பொதுவாக மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு அதற்கடுத்து படவாய்ப்புகள் வந்து குவியும், ஆனால் இந்த நடிகைக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாகுபலி’. தெலுங்கில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் மூலபதிப்பாகவே வெளியானது. மலையாளம், ஹிந்தியில் டப்பிங் செய்யபப்ட்டது. 600 கோடி வசூல் செய்யப்பட்ட இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரான ‘ராஜமாதா’ கதாபாத்திரத்தில் நடித்தவர் ரம்யாகிருஷ்ணன்.

ரம்யா கிருஷ்ணன், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘குயின்’ என அடுத்தடுத்து முக்கிய கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். ‘குயின்’ வெப் சீரிஸில் நடிகை ஜெயலலிதாவாக நடித்திருந்தார். சூப்பர் டீலக்சில் யாரும் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்தே பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதன் பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு வேறு எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

படங்களில் நடிக்காமல் போனாலும், ரம்யா கிருஷ்னன் தமிழில் அவ்வப்போது சில ஷோக்களில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். ராதிகா தொகுத்து வழங்கிய கோடீஸ்வரி நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார். ரம்யாகிருஷ்ணனுக்கு 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘தேவ்’ தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆகும்.

ரம்யா கிருஷ்ணன் அவராகவே படங்களில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுக்கிறாரா இல்லை, சினிமா அவரை ஒதுக்குகிறதா என தெரியவில்லை. ஆனால் இவருக்கு பெரிய காம்பேக் கொடுக்கும் நேரமாக ஜெயிலர் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

Trending News