திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நினைத்தது மட்டுமில்லை, தொட்டதெல்லாம் துலங்குதாம்.. உயரப் பறக்கும் ராஷ்மிகா கொடி

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் பிரபலமானவர் நடிகை. தற்போது இரண்டு மொழிகளிலுமே ஒரு ராசியான நடிகை என்ற பெயரை வாங்கினார். அவர் தொட்டதெல்லாம் ஓஹோ என்று போகுதாம். முதலில் இவர் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.

அதேபோல் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து எப்படியாவது தளபதியுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை என ராஷ்மிகா பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதேபோல் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.

Also Read :ராஷ்மிகா பக்கம் போக பயப்படும் தயாரிப்பாளர்கள்.. நியாயமே இல்லாமல் உயர்த்திய சம்பளம்

அதுமட்டுமின்றி சமீபத்தில் விஜயுடன் ராஷ்மிகா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் கமர்சியல் படங்களிலும் ராஷ்மிகா பின்னி பெடல் எடுத்து வருகிறார். அதாவது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்றிருந்தது. அடுத்ததாக பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்பட்டார் ராஷ்மிகா. அதுவும் இப்போது நிறைவேறியுள்ளது. ஏக்தா கபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள குட்பை என்ற பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Also Read :பெரும் மனவருத்தத்தில் ராஷ்மிகா.. காட்டுத் தீயாய் பரவும் நைட் பார்ட்டி

இவ்வாறு ராஷ்மிகாவின் ஒவ்வொரு ஆசையும் ஒன்றாக நிறைவேறி வருகிறது. அதுமட்டுமின்றி டாப் நடிகர்களுடன் தற்போது ராஷ்மிகா நடித்து வருவதால் அவரது சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தி உள்ளார்.மேலும் ராஷ்மிகா நடித்த எல்லா படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனால் எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து ராஷ்மிகா தனது படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். இப்படியே போனால் இன்னும் சில காலங்களில் ராஷ்மிகா நம்பர் ஒன் நடிகையாக வரவும் வாய்ப்புள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read :விஜயுடன் செல்பி புகைப்படம் எடுத்த ராஷ்மிகா.. சூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பான வம்சி

Trending News