திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கேப்டன் மில்லருக்கு பின் சிம்பு பட இயக்குனருடன் கூட்டணி போடும் தனுஷ்.. மாஸ் அப்டேட்

நடிகர் தனுஷ் அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் வரும் வியாழனன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ட்ரைலர் மீண்டும் ஒரு காதல் கொண்டேன் தனுஷை கண் முன் நிறுத்துகிறது.

மேலும் தனுஷுக்கு வாத்தி என்னும் இரு மொழி படமும் ரிலீசுக்காக காத்திருக்கிறது. முதன் முறையாக தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா என பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

Also Read: தனுஷை தூண்டில் போட்டு இழுத்த சிம்பு பட நடிகை.. அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்

சமீபத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கான பூஜை விழா நடைபெற்றது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்க இருக்கிறார். வரும் 28 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

இந்த நிலையில் இப்போது தனுஷின் அடுத்த புதிய படத்திற்கான அப்டேட்டும் வந்து இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் இளம் இயக்குனரான இளன் என்பவருடன் பணியாற்ற இருக்கிறார். இவர்கள் இருவரும் படம் பண்ண இருப்பதாக கடந்த ஆண்டே தகவல்கள் வெளியான நிலையில் இப்போது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Also Read: இந்த 2 படங்களின் தழுவல் தான் நானே வருவேன்.. இப்பவே வரும் நெகட்டிவ் ரிவ்யூ

இயக்குனர் இளன் ஏற்கனவே ஹரிஷ்-ரைசா ஜோடியை வைத்து ‘பியார் பிரேமா காதல்’ என்னும் திரைப்படத்தில் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இளைஞர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இவரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படமும் காதல் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு பட ஹீரோயின் சித்தி இதானி தனுஷுக்கு ஜோடியாகிறாரா.

இப்போது தனுஷ் காட்டில் நல்ல மழை என்றே சொல்லாம். சமீபத்தில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து 2 படங்கள் ரிலீசாக இருக்கின்றன. கேப்டன் மில்லர் பட சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே அமேசான் ஓடிடி நிறுவனம் 38 கோடிக்கு டிஜிட்டல் உரிமையை வாங்கிவிட்டது.

Also Read: சிவகார்த்திகேயனை பார்த்து பயந்து ஒதுங்கிய தனுஷ்.. வளர்த்த கிடா மார்பில் முட்டிய சம்பவம்

Trending News