செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அருள்மொழிவர்மனை வைத்து ப்ரோமோஷன்.. சன் டிவியை ஒழித்து கட்ட விஜய் டிவியின் பிரம்மாண்ட முயற்சி

சன் டிவி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. பல சின்னத்திரை தொடர்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற சன் டிவி ஏராளமான ரசிகர் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி என்ற பெயரை பெற்றது. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் வந்து பிரபலமான தொலைக்காட்சி விஜய் டிவி.

இது புதுவிதமான நிகழ்ச்சிகளை கொண்டு வந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, கலக்கப்போவது யாரு என பல புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தது. இதனால் சன் டிவிக்கு இணையான ரசிகர்களை விஜய் டிவியும் பெற்றிருந்தது.

Also Read :பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கும் விவாகரத்து நடிகர்.. அப்ப ஒரு லவ் ஸ்டோரி கன்ஃபார்ம்

ஆனால் சின்னத்திரை தொடர்கள் பொருத்தவரையில் டிஆர்பியில் சன் டிவியில் முதலிடத்தை வகித்து வருகிறது. இதற்காக விஜய் டிவி ஒரு யுக்தியை கையாள உள்ளது. அதாவது சன் குழுமம் சன் டிவி, கே டிவி, சன் மியூசிக், சன் நியூஸ், சுட்டி டிவி, சன் லைப் என பல தொலைக்காட்சிகளை வைத்துள்ளது.

ஆனால் விஜய் டிவி, விஜய் மியூசிக் என்ற மற்றொரு தொலைக்காட்சியை மட்டுமே வைத்துள்ளது. இதனால் வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதியில் இருந்து விஜய் டக்கர் என்ற தொலைக்காட்சியை பிரம்மாண்டமாக அறிமுகம் செய்ய உள்ளது. இது இளைஞர்களைக் கவரும் படியாக பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய உள்ளது.

Also Read :சீரியல் நடிகைகளின் வாழ்க்கையை சீரழிக்கும் ஈஸ்வர்.. மகாலட்சுமி முதல் திவ்யா வரை

அந்த வகையில் சினிமா காரம் காபி, ட்ராக் மேல லக்கு, ஸ்டைல் ஸ்டைலுதான், ஸ்டாருடன் ஒரு நாள், சம்திங் சம்திங் போன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அருள்மொழி வருமனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி விஜய் டக்கர் சேனலுக்கு ப்ரோமோஷன் செய்துள்ளார்.

அதேபோல் சிபிராஜ், அஸ்வின், ஆர்யா, இசையமைப்பாளர் இமான் போன்ற பல பிரபலங்கள் விஜய் டக்கர் சேனலுக்கு ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். இதனால் இந்த தொலைக்காட்சியை பார்க்க இளைஞர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் இந்த தொலைக்காட்சி மூலம் விஜய் டிவி தனது டிஆர்பியை அதிகப்படுத்திக் கொள்ள உள்ளது.

Also Read :பிக்பாஸ் வீட்டிற்குள் நமிதா போல செல்லும் அடுத்த திருநங்கை.. பத்து நாளாவது தாக்கு பிடிப்பாங்களா!

Trending News