விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் இவ்வளவு நாட்களாக தன்னுடைய இரண்டு மகள்களும் தனக்கு பிறக்கவில்லை என சந்தேகப் பேய் பிடித்து ஆடிய டாக்டர் பாரதிக்கு இப்போதுதான் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் தன்னுடைய இரண்டு மகள்களான லஷ்மி, ஹேமா இருவரையும் மருத்துவமனைக்கு முழு பரிசோதனை செய்வதாக கூறி அழைத்து சென்று, அவர்களது இரத்த மாதிரியை தன்னுடைய இரத்த மாதிரிகளுடன் ஒப்பிட்டு அவர்களிருவரும் தனது பிறந்தவர்களா என பார்க்கப் போகிறார்.
Also Read: 900 எபிசோடை கடந்து இழுத்து மூடப்படும் விஜய் டிவி தொடர்.. ஒரு வழியாக எண்டு கார்ட் போட்ட இயக்குனர்
இன்னிலையில் வெண்பா எப்படியாவது பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று, வயிற்றில் வளரும் ரோஹித்தின் குழந்தையை அவருடைய குழந்தைதான் என நம்ப வைக்க பார்க்கிறார். மேலும் ஜமீன் பரம்பரை என ரோஹித் பொய் சொல்லிய விஷயம் அனைவருக்கும் தெரிந்ததால் அந்தக் கல்யாணம் நிற்கப் போவதாகவும் இனி நம் திருமணத்தில் யாரும் தடையாக நிற்க மாட்டார்கள் என்று வெண்பா பாரதிக்கு போன் செய்து ஓவர் ஆட்டம் காட்டுகிறார்.
வெண்பாவின் ஓவர் ஆட்டத்தை பார்த்த பாரதியின் மகள் ஹேமா, போனை வாங்கி கண்டபடி பேசி திட்டி விடுகிறார். ஹேமாவின் பேச்சைக் கேட்ட பாரதியும் இந்த வெண்பாவின் நம்பரை பத்து வருடங்களுக்கு முன்பே பிளாக் செய்திருந்தால் இப்போது என்னுடைய வாழ்க்கை வேகமாக வேற மாதிரி அமைந்திருக்கும் என்று அவருக்கு இப்போதுதான் உரைக்கிறது.
Also Read: 50 வயதிலும் காதல் குறையாமல் இருக்கும் மன்மதன்.. மகா சங்கமத்தில் கஞ்சியாக போகும் கோபி
இதன் பிறகு பாரதி எடுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் லஷ்மி, ஹேமா இருவரும் பாரதிக்குதான் பிறந்தது என்ற உண்மை தெரிய போகிறது. இதன் பிறகு கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க பாரதிக்கு வாய் கூசுகிறது. எனவே கிளைமேக்ஸை நோக்கி நகரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்னும் ஒரு சில வாரத்தில் இந்த சீரியலை ஊத்தி மூட போகின்றனர் என்றதும் நெட்டிசன்கள் கொண்டாடுகின்றனர்.
இவ்வளவு நாள் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் ஜவ்வாய் இழுத்த பாரதிகண்ணம்மா சீரியலில், அந்த டெஸ்ட் ரிப்போர்ட் வந்தபிறகு பாரதி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வார் என்பதால் இந்த சீரியல் நிறைவடையவுள்ளது.
Also Read: ஒரு வழியா பாரதி எடுத்த டிஎன்ஏ டெஸ்ட்.. கதிகலங்க வைச்ச ரிசல்ட்