சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதியே இறந்துட்டாங்க.. சிக்கிய நாலு பேர், அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆறுமுகசாமி ஆணையம்

சிறந்த ஆளுமை திறமை கொண்ட ஒரு பெண் முதலமைச்சர் ஜெயலலிதா. சினிமா, அரசியல் என இரண்டிலுமே தனது வலுவான பங்களிப்பை ஜெயலலிதா கொடுத்திருந்தார். அவர் இறந்த பிறகு தான் அதிமுகவில் இவ்வளவு குளறுபடிகள் இருந்தது தெரியவந்தது. மேலும் அதிமுக கட்சியிலும் பிளவு ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக அவரது தொண்டர்கள் முதல் பலருக்கும் சந்தேகம். இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இன்று இதற்கான விசாரணை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Also Read : ஜெயலலிதா பேச்சைக் கேட்டு உச்சி குளிர்ந்த ரஜினி.. காற்றில் பறந்த மனஸ்தாபம்

அதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, மருத்துவர் கே எஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் 4 பெயரும் குற்றம் செய்தவர்களாக விசாரணை ஆணையம் பதிவு செய்துள்ளது. மேலும் 2012இல் ஜெயலலிதா, சசிகலா இணைந்த பின்பும் இவர்களுக்குள் சமூகமான உறவு இல்லை குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா ஜெயலலிதாவுக்கு இதய சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் கடைசிவரை ஜெயலலிதாவுக்கு அந்த சிகிச்சை செய்யப்படவில்லை. மேலும் எல்லோருக்கும் மிகப்பெரிய சந்தேகம் ஜெயலலிதா இறந்த தேதி எப்போது என்பதுதான்.

Also Read : எம்ஜிஆர், ஜெயலலிதா போல வாழ ஆசைப்படும் திரிஷா.. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல!

அப்போலோ அறிக்கையின்படி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி 11:30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் சாட்சிகளின் அடிப்படையில் ஒரு நாள் முன்னதாக அதாவது டிசம்பர் 4ஆம் தேதி அன்று மதியம் 3-3.50க்கு இடைப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா இறந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஜெயலலிதா மயக்கத்தில் இருந்தே தான் மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மயக்கம் அடைந்த பின் நடந்த நிகழ்வுகள் அனைத்துமே ரகசியமாக்கப்பட்டுளளது. இவ்வாறு மருத்துவ அறிக்கையில் இருந்து எல்லாமே முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் ஜெயலலிதா மரணத்தில் பல மர்மங்கள் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read : இறந்த பின்னும் அரசாங்க கஜானாவை நிரப்பும் ஜெயலலிதா.. அதிரடியாக வெளிவந்த அறிவிப்பு!

Trending News